குதிரை வாகனத்தில் சவுந்தரராஜ பெருமாள்
திண்டுக்கல், வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் திண்டுக்கல்லில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். வடமதுரை சவுந்தரராஜ பெருமாள், கடந்த மார்ச் 30ல் பல்லக்கில் புறப்பட்டார். மார்ச் 31ல் முள்ளிப்பாடி ஆற்றில் இறங்கினார். ஏப்.1 முதல் திண்டுக்கல் நந்தவனப்பட்டி, என்.ஜி.ஓ., காலனி, பாலகிருஷ்ணாபுரம், திருமலைசாமிபுரம், நாகல்நகர், பாரதிபுரம், சவுராஷ்ட்ராபுரம் ஆகிய இடங்களில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நாகல்புதுார் பலிஜவாரு பொது மகாஜன உறுப்பினர்கள் சார்பில் 98 வது ஆண்டு திருஅவதார மண்டகப்படி நடந்தது. இதில் சேஷ வாகனத்தில் ராமர், கிருஷ்ணர், மோகினி அவதாரங்களில் காட்சி அளித்தார். பின்பு புஷ்ப பல்லக்கில் கள்ளர் வேடம் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. டாக்டர் ராகவன் தலைமையில் வழக்கறிஞர் ஸ்ரீராம்பாலாஜி முன்னிலையில் சம்பத்குமார், சிவக்குமார், ராஜ்குமார், ஜெயபாலன், சவுந்தர்ராஜன், வேணுகோபால் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.