ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவர் கோவிலில் கண்கவர் ஓவியங்கள்
ADDED :2741 days ago
ஸ்ரீபெரும்புதுார்:ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வரையப்பட்டுள்ள கண்கவர் ஓவியத்தை, பக்தர்கள் ரசித்து செல்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. ராமானுஜரின் அவதார தலமான இந்த கோவிலில், ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ராமானுஜரின், 1,001வது ஆண்டு விழா, ஏப்., 12ல் துவங்கி, 21ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில், கோவிலின் உள்பிரகார மண்டபத்தில், 108 திவ்ய தேசங்களை குறிக்கும் வகையில், 108 அழகிய கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி வரும் பக்தர்கள், இவற்றை கண்டு, ரசித்து செல்கின்றனர்.