மாயக்காரி மாசாணி அம்மன் பீடத்தில் மறுபூஜை விழா
ADDED :2796 days ago
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே உள்ள அம்மாபட்டி மாயக்காரி மாசாணி அம்மன் பக்தர்கள் பீடத்தில், மயான பூஜை மறுபூஜை விழா நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மயான பூஜையின் போது மல்லாந்து படுத்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 16 அடி மாசான கருப்புச்சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சென்னை ஐகோர்ட் லோக்அதாலத் நீதிபதி வள்ளிநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.