உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துறவறம் பூண்டார் ஜெயின் இளைஞர்

துறவறம் பூண்டார் ஜெயின் இளைஞர்

கோவை;கோவையை சேர்ந்த மென்பொருள் தொழில் நுட்ப பொறியாளர், நேற்று துறவறம் பூண்டார்.கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் மனோஜ் வேத்நாத்மூத்தா, 25. பெங்களூரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர்,ஜெயின் கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மத துறவியாவதற்கான பயிற்சி மேற்கொண்டார். பயிற்சியை நிறைவு செய்த நிலையில், கோவையில் நேற்று துறவறம் பூண்டார். ரங்கேகவுடர் வீதியிலுள்ள சுபாஷ்நாத் கோவிலில் துவங்கிய துறவற ஊர்வலம், வைசியாள் வீதியிலுள்ள விமல்நாத் கோவிலை அடைந்தது. ஏராளமானோர் துறவற ஊர்வலத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !