அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: மண்டல பூஜை நிறைவு
ADDED :2743 days ago
ஆத்தூர்: ஆத்தூர், அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவின், 48வது மண்டல பூஜை நிறைவு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆத்தூர், ராமலிங்க வள்ளலார் தெருவில், அங்காளம்மன் கோவில் உள்ளது. கடந்த, பிப்., 19ல், கும்பாபி?ஷக விழா நடந்தது. கோவில் வளாகத்தில் விநாயகர், வீரபத்திரர், பாவாடைராயர் தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கும்பாபி?ஷக விழாவுக்கு பின், 48 நாள் மண்டல பூஜை நடந்தது. நிறைவு விழாவான நேற்று, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அங்காளபரமேஸ்வரி, காளியம்மன், மாரியம்மன், வீரபத்திரர் வேடமணிந்து வந்த கலைஞர்கள், புஷ்ப அலங்கார தேர் திருவீதி உலாவுடன், நடனமாடியபடி வந்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.