தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஓசூர்: ஓசூரில் உள்ள, தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூரில் உள்ள, ராயக்கோட்டை சாலை பாரதி நகரில், தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபி?ஷக விழா, நேற்று முன்தினம் நடந்தது.
விழாவையொட்டி, காலை, 6:00 மணிக்கு விநாயகர் பிரார்த்தனை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, கோவில் விமான கோபுரங்கள், 10:00 மணிக்கு, விநாயகர், அம்மன், நவக்கிரக சுவாமிகளுக்கு, கும்பாபி?ஷகம் நடந்தது. ஓசூர் வேல்முருகன் கோவில் தலைமை பூசாரி ஏகாம்பர குருக்கள், வேலூர் சேண்பாக்கம் சிவஸ்ரீ நடராஜ குருக்கள் ஆகியோர், கும்பாபி?ஷகத்தை நடத்தி வைத்தனர். காலை, 11:00 மணிக்கு தீர்த்த பிரசாத வினியோகம், அம்மனுக்கு மகா அபி?ஷகம், சிறப்பு பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகிய, நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.