முதலில் குணம்! அப்புறம் பணம்!
ADDED :2786 days ago
எந்த தெய்வத்திற்குரிய ஸ்தோத்திரத்தைப்படித்தாலும், அதன் இறுதிப் பகுதியில் அதைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள் ‘பலச்ருதி’ என்னும்ஸ்லோகமாக இருக்கும். சவுந்தர்யலஹரி ‘ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா’ என்னும்ஸ்லோகத்தில் அம்பிகையை வணங்குவோருக்கு உண்டாகும் பலன்பட்டியலாக இடம் பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள், சரஸ்வதி கடாட்சத்தால் உயர்ந்த அறிவும், நல்ல குணமும், லட்சுமி கடாட்சத்தால் செல்வ வளமும், நல்ல அழகும் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. புத்தி இல்லாதவனிடம் பணம் சேர்ந்தால் தீமையே உண்டாகும். அதனால்,அம்பிகை, தன்னைவழிபடுவோருக்குமுதலில் நல்ல புத்தியைக் கொடுத்து, அதன்பின் செல்வவளம் அருள்கிறாள்.