உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2849 days ago
கீழக்கரை, உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் பச்சை மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். மூலவர் வராகி அம்மனுக்கு 11 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் காணப்பட்டார். கோயில் அருகே உள்ள ராக்காச்சி அம்மன், கருப்பண்ண சுவாமிக்கு ஆடு, கோழி பலியிட்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.