பங்குனி திருவிழா கோலாகலம்: அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்
ADDED :2848 days ago
கரூர்: முத்து மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவில், அக்னி சட்டியேந்தி, அலகு குத்தி, அமராவதி ஆற்றிலிருந்து ஊர்வலமாக சென்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர், தான்தோன்றிமலை முத்துமாரியம்மன், பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவில், தேரோட்டம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, அமராவதி ஆற்றிலிருந்து ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி முக்கிய வீதிகளான, சுங்ககேட், சிவசக்தி நகர், மில்கேட், தான்தோன்றிமலை வழியாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு, முத்துமாரியம்மன் சிம்மவாகனத்திலும், பகவதி அம்மன் காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.