ரெட்டணையில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :2796 days ago
மயிலம்:மயிலம் ஒன்றியம் ரெட்டணை கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.ரெட்டணையில் ராமநவமி நிறைவு நாள் விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு ஆன்மிக சொற்பொழிவிற்கு, சந்திரகுப்தா தலைமை தாங்கினார்.விழுப்புரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., செயலாளர் நாமதேவன், சுகுணா அம்மா முன்னிலை வகித்தனர். விஸ்வ இந்து பரிஷத், மயிலம் ஒன்றிய செயலாளர் நாராயணன் வரவேற்றார். வட தமிழக விஸ்வ இந்து பரிஷத் மாநிலத் தலைவர் ஞானகுரு சிறப்புரையாற்றினார். இதில் வெங்கடாஜலபதி, லட்சுமிநாராயணன், ராஜி, ஆலய குருக்கள் அருணாசலம் மற்றும் ஏராமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.