புனித ஜெபஸ்தியார் ஆலய தேர் பவனி
ADDED :2796 days ago
வால்பாறை:சிறுகுன்றா எஸ்டேட்டில், புனித ஜெபஸ்தியார் ஆலய தேர் பவனி நடந்தது. வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் புனிதஜெபஸ்தியார் ஆலய தேர்த் திருவிழா கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், இருவேளை சிறப்பு நவநாள், ஜெபவழிபாடுகள் நடந்தன. விழாவில், கடந்த, 8ம் தேதி மாலை ஆலய பங்குதந்தைகள் மரியஜோசப், டேவிட் அலெக்சாண்டர் ஆகியோர் தலைமையில் கூட்டுபாடல் திருப்பலி நடந்தது. அதன் பின், சிறுகுன்றா யூ.டி., எஸ்டேட்டில் இருந்து புனித ஜெபஸ்தியார், துாய இருதய ஆண்டவர், வேளாங்கன்னி மாதா சொரூபங்கள் தாங்கிய தேர் பவனி சிறுகுன்றா எல்.டி., புனித ஜெபஸ்தியார் ஆலயத்தை சென்றடைந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடும், விருந்தும் நடந்தது. விழாவுக்கான, ஏற்பாடுகளை சிறுகுன்றா கத்தோலிக்க கிறித்துவர்கள் செய்திருந்தனர்.