ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வாழ்க்கை ஒரு சவால்... சமாளியுங்க!
திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!
ராகு நன்மை தரும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. குருபகவான் ராசிக்கு 6-ம் இடத்தில் இருப்பது சிறப்பானதல்ல. இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப் பார்வை சாதகமாக உள்ளது. வாழ்க்கை சவால் தான் என்றாலும் அதை சமாளித்து வெல்லும் வல்லமை பிறக்கும். 2018 அக்.5ல் 7-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறிய பின், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 2019 பிப்.10ல் 8-ம் இடமான தனுசு ராசிக்கு செல்வதால் நன்மை சற்று குறையும்.
ராகு 3-ம் இடமான கடகத்தில் உள்ளதால் முயற்சியில் வெற்றி, பொருளாதார வளம் மேம்படும். 2019 பிப்.13ல் 2-ம் இடமான மிதுனத்திற்கு வருகிறார். இதனால் வீண்பிரச்னை, தூரதேச பயணம் உண்டாகலாம். கேது 9-ம் இடமான மகரத்தில் இருப்பதால் பொருள் இழப்பு அவ்வப்போது ஏற்பட வாய்ப்புண்டு. 2019 பிப்.13ல் கேது 8-ம் இடமான தனுசு ராசிக்கு மாறுவதால் விபத்து பயம், உடல்நலக்குறைவு உண்டாகலாம்.
சனிபகவான் தற்போது 8-ம் இடத்தில் இருப்பதால் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். ஏப்.28 முதல் செப்.11 வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளதாலும் சனி பலம் குறைவதாலும் கெடுபலன் ஏற்படாது.
2018 ஏப்ரல் – செப்டம்பர் குருவால் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சுப நிகழ்ச்சிகள் கைகூட தாமதம் ஆகலாம். ஆனால் குருபகவானின் 9-ம் இடத்து பார்வையால் ஓரளவு நன்மை எதிர்பார்க்கலாம். விடாமுயற்சியால் திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்கலாம்.
பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. விண்ணப்பித்த கோரிக்கை தாமதமாக நிறைவேறும். முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.
வியாபாரிகள் பணவிஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம். சுமாரான லாபம் கிடைக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திப்பர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். நண்பர்களின் விஷயத்தில் கவனம் தேவை. ஆசிரியர்களின் அறிவுரை கை கொடுக்கும். விவசாயிகள் பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகளில் ஆதாயம் கிடைக்கப் பெறுவர். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.
பெண்களுக்கு உறவினர் வகையில் வீண்பகை வரலாம். பிள்ளைகளின் விஷயத்தில் பொறுமை காப்பது நல்லது. சகோதர வழியில் உதவி கிடைக்கும்.
2018 அக்டோபர் – 2019 ஏப்ரல் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர். 2019 பிப்.13க்கு பிறகு ராகுவால் வீண்பிரச்னை, பொருளாதார இழப்பு ஏற்படலாம்.
பணியாளர்கள் சீரான நிலையில் காணப்படுவர். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல் படுவர். அரசு வகையில் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம். 2019 பிப்.10 க்கு பிறகு அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
சிலர் விரும்பாத இடமாற்றத்திற்கு ஆளாகலாம். வியாபாரிகள் கடந்த கால உழைப்பின் பலன் கிடைக்கப் பெறுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். 2019 பிப்.13 க்கு பிறகு புதிய முதலீடு விஷயத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் முன்னேற்றமான சூழல் அமையப் பெறுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
மாணவர்கள் குரு பலத்தால் கல்வி வளர்ச்சி காண்பர். ஆசிரியர் களின் அறிவுரையால் நன்மை காண்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர். 2019 பிப். 10 க்கு பிறகு அக்கறையுடன் படிப்பது நல்லது.
விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவுஇருக்காது. பயறு வகைகள், நெல், கேழ்வரகு, கரும்பு, பனைத்தொழில். பழவகைகள் மூலம் நல்ல மகசூல் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விருந்து, விழா என சென்று மகிழ்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் 2019 பிப்.10க்குப் பிறகு பணிச்சுமைக்கு ஆளாவர். குருபகவானின்7-ம்இடத்து பார்வையால் தடைபட்ட திருமணம் நடந்தேறும்.
பரிகாரம்:
* சனிக்கிழமையன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
* வெள்ளிக்கிழமையில் லட்சுமி தாயாருக்கு நெய்தீபம்
* வளர்பிறை சஷ்டியில் முருகனுக்கு பாலபிேஷகம்.