தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ADDED :2843 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நந்தி மண்டபத்தையும், லிங்கத்தையும் பாம்பு சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று இரவு, 8:30 மணிக்கு, பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, வள்ளாளமஹாராஜா கோபுரம் எதிரில் உள்ள, பெரிய நந்தி மண்டபத்தில், நான்கு அடி நீளமுள்ள பாம்பு ஒன்று, லிங்கத்தை சுற்றிசுற்றி வந்தது. இதைக்கண்ட, பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். பலர், தங்களது மொபைல் போனில் போட்டோ எடுத்தனர். கூட்டத்தை பார்த்த பாம்பு, சிறிது நேரத்தில், அங்குள்ள மின் பெட்டியினுள் தஞ்சம் புகுந்தது. கோவிலுக்குள் வந்த பாம்பு என்பதால், அதை விரட்ட, ஊழியர்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை.