உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏப்., 30ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்

ஏப்., 30ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்

மதுரை: வைகை ஆற்றில், கள்ளழகர் ஏப்., 30ல் எழுந்தருள்வார் என, அழகர்கோவில் கள்ளழகர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழாவில், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்தாண்டு, ஏப்., 30ம் தேதி அதிகாலை, 5:45 முதல், 6:15 மணிக்குள் வைகையில் கள்ளழகர் எழுந்தருள்வார் என, அழகர்கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !