உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முகவூர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு

முகவூர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு

தளவாய்புரம்: தளவாய்புரம்  முகவூர் மாரியம்மன் கோயில் பூக்குழி  விழாவில்  பக்தர்கள்   பூ இறங்கி ,அம்மனை வழிபட்டனர்.  தொடர்ந்து,மாரியம்மன், காளியம்மன், இரட்டை சப்பரம், குடைச்சப்பரம் உள்ளிட்டவைகளில் திருவீதி உலா நடைபெற்றது.  பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து   காப்பு கட்டிய  பக்தர்கள்   பூக்குழி இறங்கினர். * தளவாய்புரம்   ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல்  பூக்குழி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடந்தது.   தொடர்ந்து வான வேடிக்கை மஞ்சள் நீராட்டு  நடந்தது. * கொம்மந்தாபுரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல்  விழா பூக்குழி நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடந்தது. * கொம்மந்தாபுரம்   ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல்  விழா பூக்குழி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !