புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் நகர்வலம்
ADDED :2795 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், வரசித்தி விநாயகர், சின்னமாரியம்மன், புஷ்ப பல்லக்கில் நகர்வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை சின்னமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள, வரசித்தி விநாயகர், சின்னமாரியம்மன் கோவில், 21ம் ஆண்டு திருவிழா நடந்தது. கடந்த, 9ல், காலை, 5:00 மணிக்கு, வரசித்தி விநாயகருக்கும், சின்ன மாரியம்மனுக்கும் அபிஷேகம், மங்கள ஆரத்தி நடந்தது. மாலை, சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, புஷ்ப பல்லக்கில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், வரசித்தி விநாயகர், சின்னமாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக, நகர்வலமாக சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.