அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி
ADDED :2795 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, விரதம் இருந்த பக்தர்கள் 51,101 அக்னிசட்டிகள் எடுத்தனர்.பறவை காவடி, அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பெண்கள் அக்னி சட்டியுடன் வேப்பிலை ஏந்தி பக்தி பரவசத்துடன் வந்தனர். முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று அதிகாலை 5 :00மணிக்கு கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில், 100 க்கு மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பூக்குழி இறங்குவர்.