உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செந்தூர் கோயிலில் புத்தாண்டு கட்டண தரிசனம் மூலம் ரூ.13 லட்சம் வசூல்!

செந்தூர் கோயிலில் புத்தாண்டு கட்டண தரிசனம் மூலம் ரூ.13 லட்சம் வசூல்!

திருச்செந்தூர்:திருச்செந்தூர் முருகன் கோயிலில் புத்தாண்டு ஜன. 1ம் தேதி ஒருநாள் மட்டும் தரிசன கட்டணம் மூலம் வருமானம் கடந்த ஆண்டைவிட அதிகமாக (3.25) லட்சத்தை தாண்டியதாக கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் தெரிவித்தார்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் நிரூபர்களிடம் கூறியதாவது, கோயிலில் கடந்த 2011ம் வருடம் புத்தாண்டு முதல் நாளன்று தரிசனகட்டணம் மூலம் 9 லட்சத்து 97 ஆயிரத்து (910) தொள்ளாயிரத்து பத்து ரூபாய் வசூலாகியுள்ளது. இந்த ஆண்டு 2012ம் வருடம் புத்தாண்டு முதல் நாளன்று தரிசன கட்டணம் மூலம் ரூ.13 லட்சத்து 28 ஆயிரத்து 650 வசூலாகியுள்ளது. அதே போல் 2010ம் டிசம்பர் மாதம் தரிசன கட்டணம், உண்டியல், அன்னதான உண்டியல் மற்றும் தங்கும் விடுதிகள் மூலம் கிடைத்த வருமானம் ரூ.ஒரு கோடியே 58 லட்சத்து 48 ஆயிரத்து 768 ரூபாய் ஆகும். இதே போல் கடந்த 2011 டிசம்பர் மாதம் கிடைத்த வருமானம் ரூ.ஒரு கோடியே 87 இலட்சத்து 95 ஆயிரத்து 635 ஆகும். இது 2010 டிசம்பர் மாதத்தை விட அதிகமாக ரூ.29 லட்சத்து 48 ஆயிரத்து 866 ரூபாயாக உள்ளது.தற்போது பக்தர்களின் வசதிக்காக வரிசை முறைகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த மேம்பாலத்தை அகற்றியதால் சுலபமாக தரிசனம் செய்ய முடியவில்லை என்று சிலபேர் வதந்திகளை பரப்பி வந்தனர். ஆனால் அது உண்மையல்ல. தற்போது உள்ள வரிசை முறையில் பக்தர்கள் சுலபமாக அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோயில் வருமானம் அதிகரித்துள்ளது. ஆன ந்த விலாஸ் மண்டபத்தின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 8ம் தேதி நடக்கிறது. மேற்கண்ட தகவல்களை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் கூறினார். நிகழ்ச்சியின் போது கோயில் கண்காணிப்பா ளர் ராமசாமி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !