108 திவ்யதேச பெருமாள் வைபவம் இன்று தொடக்கம்!
கரூர்: கரூரில் ஆர்ய வைஸ்ய சங்கம் சார்பில் 108 திவ்யதேச பெருமாள் சந்தன காப்பு அலங்கார வைபவம் இன்று ( 6 ம் தேதி) தொடங்குகிறது. இதுகுறித்து விழா குழு தலைவர் ராஜகோபால் கூறுகையில், "கரூர் ஸ்ரீ வாசவி மஹாலில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை 108 திவ்யதேச பெருமாளை பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம். தரிசன வைபவம் வரும் 8 ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. மேலும், இன்று மாலை 6 மணிக்கு பாரதி நாட்டிய நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு சுகி.சிவம் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. நாளை (7 ம் தேதி) மாலை 6 மணிக்கு சிபியின் வாய்ப்பாட்டு, 6.30 மணிக்கு மதுமிதா நாட்டிய நிகழ்ச்சி, இரவு 7.15 மணிக்கு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பஜன் மண்டலி, 8 ம் தேதி காலை 11 மணிக்கு ஆதித்யா கல்யாண ராமன் சொற்பொழிவு, இரவு 6.15 மணிக்கு காவ்யா நாட்டியம், இரவு 7 மணிக்கு தேச மங்கையர்கரசியின் குறையொன்றும் இல்லை கோவிந்தா என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது என்றார். அப்போது ஆர்ய வைஸ்யா சங்க செயலாளர் ரங்கராஜன், வாசவி மன்ற நிர்வாகி தண்டபாணி, இளைஞர் அணி நிர்வாகி சுப்ரமணி, சேவா சங்க பொருளாளர் சித்தேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.