பத்திரகாளியம்மன் கோவிலில் வசந்தோற்சவத்துடன் விழா நிறைவு
ADDED :2836 days ago
அந்தியூர்: அந்தியூர், பத்திரகாளியம்மன் கோவிலில், வசந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் பண்டிகை நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 15ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும், சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 4ல் குண்டம் திருவிழா நடந்தது. 10ல் பரிவேட்டை, நேற்று வசந்தோற்சவம் மற்றம் மஞ்சள் நீராட்டு விழாவுடன் பண்டிகை நிறைவடைந்தது. அந்தியூர், சின்னத்தம்பிபாளையம், புதுப்பாளையம், பிரம்மதேசம், நகலூர் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.