சொக்க நாச்சியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
                              ADDED :2758 days ago 
                            
                          
                          அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள, கூத்தம்பூண்டி சொக்க நாச்சியம்மன் கோவிலில், குண்டம் விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, கடந்த, 28ல் முத்து முனியப்பனுக்கு பொங்கல் வைத்தல், 30ல் பூச்சாட்டுதல் நடந்தது. கம்பம் நடுதலை தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு விசேஷ பூஜை நடந்தது. இந்நிலையில் குண்டம் திருவிழா, நேற்று நடந்தது. ஆப்பக்கூடல், கூத்தம்பூண்டி, வெள்ளாளபாளையம், அந்தியூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி மக்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மஞ்சள் நீராட்டத்துடன், நாளை விழா நிறைவடைகிறது.