உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூரில் திருப்படி திருவிழா

திருப்போரூரில் திருப்படி திருவிழா

திருப்போரூர்: திருப்போரூர், பிரணவ மலையில், 67ம் ஆண்டு திருப்படி திருவிழா இன்று நடைபெறுகிறது.திருப்போரூரில், அருணகிரிநாதர் அருட்சபையின் சார்பில், பிரணவ மலை கைலாசநாதர் கோவிலில், ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருப்படி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.நடப்பாண்டிற்கான விழா, இன்று காலை, 10:00 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்குகிறது. பின், திருமுருகன் பூஜை, வேல் பூஜைகள் நடைபெறும். இதையடுத்து, 3:00 மணிக்கு பால்குட விழாவும், இரவு, 7:00 மணிக்கு ஆரம்பமாகும் திருப்படி திருவிழா, நாளை காலை, 5:00 மணிக்கு, விஷு தரிசன சிறப்பு வழிபாட்டுடன் நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !