உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி சித்திரை விழா ஏப்.,21ல் துவக்கம்

பழநி சித்திரை விழா ஏப்.,21ல் துவக்கம்

 பழநி, பழநி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சித் திரை திருவிழா ஏப்.,21ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பழநிமுருகன்கோயில் உபகோயிலான, மேற்குரதவீதியில் உள்ள லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.,21 முதல் 30 வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,27ல் இரவு திருக்கல்யாணமும், ஏப்.,29ல் காலையில் தேரோட்டம் நடக்கிறது. விழாநாட்களில் பெருமாள், சேஷம், அனுமார், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வருகிறார். பக்திசொற்பொழிவு, இன்னிசைகச்சேரி கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !