உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்ன மாரியம்மன் கோவில் தீ மிதி விழா கோலாகலம்

சின்ன மாரியம்மன் கோவில் தீ மிதி விழா கோலாகலம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், சின்னமாரியம்மன் கோவிலில் தீமிதிதிருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் சின்னமாரியம்மன் கோவிலில் பங்குனியில், திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா, கடந்த, 29ல் கம்பம் நடப்பட்டு தொடங்கியது. ஒவ்வொரு நாளும், பல்வேறு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 11 காலை, 5:00 மணிக்கு, பெரியகொல்லப்பட்டி, சின்னகொல்லப்பட்டி மக்கள் சார்பாக, எல்லம்மாள் கோவிலில் இருந்து, பால்குட அபி ?ஷகம், பிற்பகல், 3:00 மணிக்கு, உலுப்பை கொண்டு வரப்பட்டு, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, பக்தர்கள் பால்குடம், அக்னிகரகம் எடுத்துக் கொண்டு தீமிதித்தனர். தொடர்ந்து, 7:00 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. வரும், 17ம் தேதியுடன் திருவிழா முடிகிறது. ஏற்பாடுகளை, தர்மகர்த்தா சுந்தரராஜன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !