உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தியர் வழிபட்ட கோவிலில் தமிழ் புத்தாண்டு பூஜை

அகத்தியர் வழிபட்ட கோவிலில் தமிழ் புத்தாண்டு பூஜை

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே, கணபதிபாளையத்தில், காவிரி ஆற்றின் நடுவில், நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பிரம்மஹத்தி தோஷம் நீங்க, மண்ணில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அகஸ்திய முனிவர் தவம் செய்தார். இதனால் சித்திரை முதல் நாளில், சாப விமோசனம் பெற்றார். எனவே இக்கோவிலில், சித்திரை முதல் நாளில் வழிபட்டால், சாப விமோசனம், அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு சங்காபி?ஷகம் நடக்கிறது. முன்னதாக, 11ல் துவங்கிய லட்சார்ச்சனை, இன்று மாலையுடன் நிறைவடைகிறது. கோவிலில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !