உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்ம வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா

சிம்ம வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா

ஸ்ரீபெரும்புதுார்: சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ராமானுஜர், வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ராமானுஜரின், 1,001ம் ஆண்டு திரு அவதார விழா, 12ம் தேதி துவங்கியது. விழாவின் நான்காம் நாளான, நேற்று காலை, சிம்ம வாகனத்தில், ராமானுஜர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், 1:00 மணிக்கு, ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மாலை, மங்களகிரி வாகன புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !