திருப்பரங்குன்றத்தில் ஏர் பூட்டும் விழா
ADDED :2746 days ago
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம், கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படியானது.
பாரம்பரியமாக நடக்கும் ஏர் பூட்டுதல் விழாவில் கிராமத்தினர், விவசாயிகள் குழந்தைகளுடன் புதிய தார் குச்சி நுனியில்பூ சுற்றி கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து, மலையை சுற்றிவந்து நான்கு ஏர்களில் காளைகளை பூட்டி தென்பரங்குன்றத்தில் கோயில் நிலங்களை உழுதனர். கல்வெட்டு குகை கோயில் முன் கிராமத்தினர், ஏழு குளம் பாசன விவசாயிகள் கூட்டம் நடத்தி கூலி நிர்ணயம் குறித்து ஆலோசித்தனர். இரவு சிறப்பு பூஜை நடந்தது. திருவாட்சி மண்டபத்தில் இரவு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.