மழை வேண்டி கோவிலில் சிறப்பு பூஜைகள்
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே நெகமம் கே.வி.கே., நகர் ஓம் ஸ்ரீ ஆதிபராசக்தி கோவிலில், மழை வேண்டி ஸ்ரீ வருணதேவர் வேள்வி மற்றும், 1008 குடம் தீர்த்தம் விடுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம், திருமூர்த்தி மலை, தேவிகுளம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை, 5:00 மணிக்கு, பேரூர் சாந்தலிங்கர் அருள் நெறி மன்றத்தினர் மழை வேண்டி ஸ்ரீ வருண தேவர் வேள்வியை நடத்தினர். பின்னர் காலை, 8:30 மணிக்கு கோவில் முன், உற்சவ மூர்த்தியான, ’மழை மாரி’ அம்மனுக்கு, 1008 குடம் தீர்த்தம் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனுக்கு தீர்த்தம் செலுத்தி, மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, அலங்காரம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். இதில், திரளான பொதுமக்கள், நெகமம் பக்தஸ்ரீ ராஜேஸ்வரி டிரஸ்ட்டை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.