போடி பகவதியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :3068 days ago
போடி : போடி ஜே.கே.பட்டி பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. சாலைக்காளியம்மன் கோயில் ஊற்று நீரில் இருந்து கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இருநுறுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். மூன்று நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மழை வேண்டி விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.