கோவில்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள்
மாமல்லபுரம்: மாவட்டத்தில் பல கோவில்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழக, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், பல கோவில்கள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில், பல கோவில்களில், சிலைகள், ஆபரணங்கள் திருட்டு அதிகரித்து வருகிறது. அதை கண்காணித்து தடுக்க, உரிய வசதிகள் இல்லை. எனவே, விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை கண்காணித்து, களவு போகாமல் பாதுகாக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, அத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட கோவில்களில், வளாக தேவைக்கேற்ப, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள், ஆளவந்தார் அறக்கட்டளை அலுவலகம்; கடம்பாடி, மாரி சின்னம்மன்; கல்பாக்கம் நகரியம், ஏகாம்பரேஸ்வரர்; சதுரங்கப்பட்டினம், திருவரேஸ்வரர் மற்றும் மலைமண்டல பெருமாள்; கூவத்துார், திருவாலீஸ்வரர் கோவில்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.