லட்சுமிகணபதியை வணங்குங்க!
ADDED :2777 days ago
அட்சயதிரிதியை அன்று தொடங்கிய செயல்கள் இனிதே நிறைவேறும் என்பதற்கு மகாபாரதமே உதாரணம். வேதவியாசர், விநாயகரின் உதவியுடன் பாரதத்தை எழுதத்தொடங்கியது இன்று தான். ‘அட்சய’ என்றால் ‘வளர்தல்’. அதனால் தான் இந்த காவியம் இலக்கியங்களிலேயே மிகவும் பெரியதாக உள்ளது. அன்று தொடங்கி இன்றுவரை அழியாத காவியமாயும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது. இதனால் தான், அட்சய திரிதியை அன்று வாங்கும் எதுவும் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை வந்தது. மேலும், எந்தச் செயலையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கவேண்டும் என்பர். அந்த விநாயகரே மகாபாரதத்திற்கு பிள்ளையார்சுழி போட்டு ஆரம்பித்து வைத்தார். அதனால், அட்சய திரிதியை அன்று லட்சுமி கணபதி வழிபாடு செய்வது மிகுந்த பலன் தரும்.