அட்சய திரிதியை வழிபாடு!
ADDED :2777 days ago
*செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிக்குரிய நாளாக இருப்பதால் லட்சுமி சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி செந்தாமரை மலரால் அர்ச்சிப்பது நன்மை அளிக்கும்.
*கிருஷ்ணருக்கு குசேலர் அவல் அளித்த நாள் என்பதால், காய்ச்சிய பாலுடன் அவல், வெல்லம் சேர்த்து கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வது சிறப்பு.
*பிதுர்வழிபாட்டுக்குரிய நாளாக அட்சய திரிதியை திகழ்கிறது. இந்நாளில் பிதுர்தர்ப்பணம் செய்வதும், பசுவிற்கு கீரை,பழம் கொடுப்பதும் நல்லது.
*அன்னபூரணி தன்னுடைய பாத்திரத்திலிந்து உலகிற்கு அன்னம் வழங்கிய நாள் என்பதால், தயிர்ச்சாதம் தானம் செய்வது புண்ணியமானது ஆகும்.
*லட்சுமி நாராயணருக்கு துளசியும், ‘யவை’ என்னும் தானியத்தையும் (கோதுமை போல் இருக்கும்) படைத்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். ‘யவை’ பூஜை சாமான் கடைகளில் கிடைக்கும்.