செல்வம் தரும் காணிக்கை
ADDED :2777 days ago
கிருஷ்ணரும், குசேலரும் பால்ய வயதில் குருகுலத்தில் ஒன்றாக படித்தவர்கள். அதன்பின் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. கிருஷ்ணர் ருக்மணியைத் திருமணம் செய்து கொண்டு துவாரகை மன்னராக இருந்தார். குசேலரோ திருமணமாகி பல குழந்தைகளுடன் வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். தன் நண்பரான கிருஷ்ணரைச் சந்திக்கச் சென்றார் ஒரு கந்தை துணியில் கொஞ்சம் அவல் வைத்திருந்தார். குசேலர் கொடுத்த அவலை வாயில் போட்டுக் கொண்டார் கிருஷ்ணர். அவலை அவர் சுவைத்தவுடன், குசேலர் குபேரரின் மாளிகை போல மாறியது. நவரத்தினமும், பொன், மணியும் நிரம்பி வழிந்தன. அந்த நாளே அட்சய திரிதியை என்ற நம்பிக்கை உள்ளது. இந்நாளில், கடவுளுக்கு வழங்கும் சிறுகாணிக்கை கூட நமக்கு பல மடங்கு செல்வத்தை தரும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது.