அட்சயதிரிதியை அன்று என்னென்ன தானம் செய்யலாம்?
ADDED :2777 days ago
அட்சயதிரிதியை நாளில் தானம் செய்வது சிறப்பு. ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும். பழவகைகளை அளித்தால் உயர்பதவி கிடைக்கும். வெயில் வெம்மை தீர குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்பவாழ்வு உண்டாகும். ஆடை தானம் செய்ய ஆரோக்கியம் கூடும். தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வி வளர்ச்சி பெருகும். தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும். தானியங்களை வழங்கிட விபத்து, அகாலமரணம் நேராது. அன்று, பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.