அள்ள அள்ள தானம்
ADDED :2777 days ago
கோவலன், மாதவி இருவருக்கும் பிறந்த பெண் மணிமேகலை. மணிமேகலை என்பது கோவலனின் குலதெய்வம். மாதவி தன் பெயரில் அமைந்திருக்கும் தெய்வத்தைக் காண மணிபல்லவத்தீவுக்குப் புறப்பட்டாள். மணிமேகலா தெய்வத்தை வழிபட்டு அதனிடமிருந்து அட்சயபாத்திரத்தைப் பெற்றாள். கற்புக்கரசியான ஆதிரை யிடம் முதல்பிச்சை ஏற்றாள். அதில் அள்ள அள்ள குறையாமல் உணவு வந்தது. அதன் மூலம் மணிமேகலை பசித்தவர்களுக்கெல்லாம் உணவிட்டு சேவை செய்தாள். இதைப் போலவே, திரவுபதியிடமும் அட்சயபாத்திரம் இருந்தது. அதைக் கொண்டு அவளும் அன்னதானம் செய்ததாக மகாபாரதம் கூறுகிறது.