அட்சய! அட்சய!!
ADDED :2777 days ago
தர்மர் கவுரவர்களுடன் சூதாடி நாட்டையும், மனைவி திரவுபதியையும் இழந்தார். துரியோதனன் திரவுபதியை மானபங்கம் செய்ய உத்தரவிட்டான். பிதாமகர் பீஷ்மர், ஆச்சாரியார்கள் அவையில் இருந்தும் இந்த அக்கிரமம் அரங்கேறியது. செய்வதறியாத திரவுபதி ஆபத்பாந்தவனான கிருஷ்ணனை பிரார்த்தித்தாள். “சங்கு சக்ரகதாபாணி ஸ்ரீமத் துவாரகா நிலய அச்சுதா! ஹே கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்!!” என்று சரணடைந்தாள். இந்த சமயத்தில் துவாரகையில் கிருஷ்ணர் தேவியருடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். ஒரு கணம் தாமதித்தாலும் திரவுபதியின் மானம் பறிபோகும் என்பதால் தன் கையை உயர்த்தி ‘அட்சய! அட்சய!’ என்றார். ‘அட்சய’ என்றால் ‘வளர்வது’ என்பது பொருள். திரவுபதியின் ஆடையை வளரச் செய்தார் கிருஷ்ணர். அபலையின் மானம் காத்த அந்தநாளே அட்சயதிரிதியை.