உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைக்கானல் பெரிய காளியம்மன் கோயில் விழா

கொடைக்கானல் பெரிய காளியம்மன் கோயில் விழா

கொடைக்கானல்: கொடைக்கானல்பெரிய காளியம்மன் கோயில் பால்குட விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் டோபி கானா பகுதியில் பெரிய காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.கடந்த மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மின்விளக்குகளால்அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் பவனி சென்று மண்டகப்படிகளில்தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தினமும் பெரிய காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன்களை நிறைவேற்றினர். நேற்று டிப்போ பகுதியிலிருந்து புறப்பட்ட பால்குடம்காளியம்மன் கோயிலை வந்தடைந்தது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !