சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புஷ்பாஞ்சலி
ADDED :2764 days ago
வீரபாண்டி: சவுந்தரராஜருக்கு, புஷ்பாஞ்சலி கோலாகலமாக நடந்தது. அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழாவை யொட்டி, தினமும், காலை, மாலையில், பல்வேறு வித வாகனங்களில், பெருமாள் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அட்சய திருதியையான நேற்று காலை, சிறு கருட வாகனத்தில், பெருமாள் வீதியுலா சென்றார். மாலை, 5:00 மணிக்கு நடந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், துளசி, சாமந்தி, அரளி, ரோஜா, மரிக்கொழுந்து, தாமரை, சம்பங்கி, குண்டு மல்லிகை, சன்ன மல்லிகை, பல வண்ண ரோஜாக்கள் உள்ளிட்ட மலர்களால் அலங்காரம் செய்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜருக்கு அபிேஷகம் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள், பக்தி பாடல்களை பாடினர். இரவு, 7:00 மணிக்கு தீப அலங்காரத்துடன் ஹனுமந்த வாகனத்தில், பெருமாள் வீதியுலா வந்தார்.