மங்கலதேவி கண்ணகி கோயிலில் கொடியேற்றம்
ADDED :2764 days ago
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா ஏப். 30ல் நடக்கிறது. அதற்காக நேற்று தேனி மாவட்டம் பளியன்குடியில், கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டியும், மாலை அணிந்தும் விரதம் துவக்கினர்.மழை பொழிய சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர் ராஜகணேசன், கூடலுார் நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் கலந்து கொண்டனர்.