உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் சொக்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் சொக்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம், ராமநாதபுரம் சொக்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விழா நாட்களில் காமாட்சி, சிவபூஜை அலங்காரம், முருகனுக்கு சக்திவேல் வழங்குதல், திருஞானசம்பந்தருக்கு பாலுாட்டல் அலங்காரம், பிட்டுக்கு மண் சுமந்த லீலை, அம்மன் தபசு கோலம், பட்டாபிேஷக காட்சி, திக்கு விஜயம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏப்.,27 காலை 10:30க்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப். 28ல் ஊஞ்சல், லலிதா சகஸ்ரநாம பாராயணம், ஏப்.,29 ல் தீர்த்தவாரியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாக அலுவலர் வி.மகேந்திரன் தலைமையில் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !