உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி மீனாட்சி அம்மன் சித்திரை விழா கொடியேற்றம்

பரமக்குடி மீனாட்சி அம்மன் சித்திரை விழா கொடியேற்றம்

பரமக்குடி பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திரு விழாவையொட்டி நேற்று கொடியேற்றப்பட்டது. இக்கோயிலின் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சுவாமி சந்நதியில் உள்ள தங்க கொடிமரத்தில் நந்தி கொடியை ஏற்றினர். பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு பிரியாவிடையுடன் சுந்த ரேஸ்வரர், மீனாட்சி, விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன் என பஞ்சமூர்த்திகள் வீதிவலம் வந்தனர். இதே போல் தினமும் பஞ்சமூர்த்திகள் குதிரை, கைலாச, காமதேனு, நந்தி, அன்னம், யானை ஆகிய பல வாகனங்களில் வீதிவலம் வரவுள்ளனர். ஏப். 27ல் மாலை 6:00 மணிக்கு மேல் மீனாட்சி திருக்கல்யாணமும், மறுநாள் காலை 8:30 மணிக்கு சித்திரை தேரோட்டமும் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !