பழநிமுருகன் கோயிலில் கார்த்திகை பெருவிழா
ADDED :3086 days ago
பழநி, பழநிமுருகன் கோயிலில் திருமுருக பக்தசபா சார்பில், கார்த்திகை பெருவிழா நடந்தது. சித்திரை மாத கார்த்திகை விழாவை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோயிலில் உச்சிகால பூஜையில் குழந்தை வேலாயுதசுவாமி, சனிபகவான், தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பழநிமலைக்கோயில் தண்டாயுதபாணிசுவாமிக்கு அபிஷேகம், பூஜையும், சொற்பொழிவுகள் நடந்தது. மாலை 108 திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது. இரவு தங்கரதப்புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.