உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் அம்மனுக்கு திருக்கல்யாணம்

திருப்பூரில் அம்மனுக்கு திருக்கல்யாணம்

திருப்பூர் : திருப்பூரில் மாரியம்மனுக்கு, 200 கிலோ மலர்களால் புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. திருப்பூர் அணைக்காட்டில் சிவசக்தி விநாயகர், மாரியம்மன், பாலமுருகன் கோவில் உள்ளது. இதன் ஐந்தாமாண்டு பூச்சாட்டு, பொங்கல் விழா கடந்த, 15ல், பொட்டுசாமிக்கு பொங்கல் வைத்து, பொறி மாற்றுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, காசிக்காடு தோட்ட கங்கையிலிருந்து, கம்பம் எடுத்து வரப்பட்டு, அக்னி கரகத்துடன், அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பூச்சாட்டின் முக்கிய நிகழ்வாக, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, அப்பகுதி பெண்களின் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.காலை, 8:00 மணிக்கு, 200 கிலோ பூக்களை கொண்டு அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்பட்டது. மதியம், உச்சிபூஜையை தொடர்ந்து, முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. மாலையில், பூவோடு ஊர்வலம் வந்தது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீர் திரு வீதி, இரவு அடசல் பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !