காளஹஸ்தி உண்டியல் வசூல் ரூ.88 லட்சம்
ADDED :3080 days ago
நகரி: சித்துார் மாவட்டம், காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசிக்கின்றனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், 18 நாட்களில், 88 லட்சத்து, 30 ஆயிரத்து, 112 ரூபாய் ரொக்கம், 36 கிராம் தங்கம், 358 கிலோ வெள்ளி, 77 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன. மேற்கண்ட தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி, பிரம்மரம்பா தெரிவித்தார்.