திருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்
ADDED :2825 days ago
திருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக நடக்கும். இந்தாண்டு 120வது சித்திரை திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை பொன்னிற குதிரை வாகனத்தில் கோயிலை விட்டு கிளம்பிய திருமால் அழகருக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். காலை 10:00 மணிக்கு புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயில் எதிரே வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களின் கோவிந்தா கோஷத்தின் இடையே திருமால் அழகர் இறங்கினார். பச்சை பட்டு உடுத்தி இறங்கியதால் இந்தாண்டு மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் தெரிவித்தனர்.