வசந்த உற்சவம்: அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி
ADDED :2827 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவம் பந்தக்கால் முகூர்த்தத்துடன் 19ம்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் மகிழ மரம் அருகே உண்ணாமலையம்மன் சமேதராய் அருள்பாலித்த அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். வரும், 29ல், தீர்த்தவாரி மற்றும் மன்மத தகனம் நடக்கும்.