உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரகுப்தர் கோவில்சித்ரா பவுர்ணமி விழா

சித்ரகுப்தர் கோவில்சித்ரா பவுர்ணமி விழா

திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ சித்ரகுப்தர் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா, வரும் 29ல் நடக்கிறது. திருப்பூர், மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையத்தில், பிரசித்தி பெற்ற, ஸ்ரீ சித்ரகுப்தர் கோவில் உள்ளது. பாவ, புண்ணியங்களை கணக்கிடும், ஸ்ரீ சித்ர குப்தர், இக்கோவிலில், தலைப்பாகையுடன், வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் சுவடியும் வைத்து கணக்கு எழுதும் கோணத்தில் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ சித்ர குப்தருக்கு தனி கோவில் என்ற சிறப்பு பெற்ற இக்கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா நடந்து வருகிறது. இந்தாண்டு திருவிழா, வரும், 28ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, ஸ்ரீ சித்ரகுப்தர் திருவீதி உலா, பால்குட ஊர்வலம், அபிேஷகம், அலங்கார பூஜையுடன் துவங்குகிறது. வரும், 29ம் தேதி காலை, 5:00க்கு, கணபதி ேஹாமம், ஸ்ரீ சித்ரகுப்தர் சிறப்பு யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !