வடுகநாத சுவாமி கோவில் சங்காபிஷேக விழா பக்தர்கள் பரவசம்
ADDED :2766 days ago
பல்லடம்:கணபதிபாளையம் வடுகநாத சுவாமி கோவில், ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 108 சங்காபிஷேக விழா நடந்தது. இக்கோவிலில். காலபைரவர் மூலவராக காட்சி அளிக்கிறார். ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நுாறாயிரம் பரவுதல், மற்றும் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. விழாவில், யாக பூஜை வழிபாடு, நுாறாயிரம் பரவுதல், அமுது நீராடல் ஆகியவை நடந்தன. நிறைவாக, லட்சார்ச்சனையுடன், 108 வலம்புரி சங்குகளால், மூலவர் காலபைரவருக்கு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் கோவிலை வலம் வந்து, பைரவருக்கு சங்காபிஷேக தீர்த்தங்களை கொண்டு சென்று வழிபட்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.