உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி

தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி

உலகத்திற்கே படியளப்பவள் அன்னை மீனாட்சி. அவள்  மீது கொண்ட பக்தியால் மன்னர்களும், பக்தர்களும் பலவித ஆபரண ங்களை அணிவித்து அழகு பார்த்தனர். அதிலும் திருமணம் என்றால் விசேஷமான நகை அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா என்ன! அதனால் மீனாட்சி கல்யாணத்தன்று இன்றும் அம்மன், சுவாமிக்கு பிரத்யேகமான நகைகளை அணிவர்.  சுவாமியின் தலையில் நீலக்கற்கள் பதித்த கிரீடம், தங்க பூணூல்,கைகள் முழுக்க ரத்தின அலங்காரம், கையில் தங்க பூச்செண்டு, மார்பில் தங்க கவசம், நளமகாராஜா கொடுத்த பதக்கம் ஆகியவை அணிவிக்கப்படும். மீனாட்சி கழுத்து முதல் பாதம் வரையில் தங்க அங்கி, தலையில் தங்க கிரீடம், தங்கக்கிளி அல்லது தங்க செங்கழு நீர் மலர், வைரத்தாலி ஆகிய ஆபரணங்கள் அணிந்து பைங்கிளியாக திகழ்வாள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !