உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா?

* ஆனி பவுர்ணமியன்று மீனாட்சியம்மனுக்கு உச்சிக்கால பூஜையில் முக்கனி அபிஷேகம் செய்கின்றனர்.
* மீனாட்சி அம்மனின் சிறப்பே  மாணிக்க மூக்குத்தி தரிசனம் தான். தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப்புத்தாண்டு, தைஅமாவாசைஆகிய நாட்களில் வைர கிரீடம் அணிந்த அலங் காரத்தில் அம்மனை தரிசிக்கலாம்.
* மீனாட்சி சன்னதி எதிரிலுள்ள கோபுரத்தை “சித்திரக்கோபுரம்” என அழைப்பர். இதிலுள்ள 25 முகம் கொண்ட“சதாசிவ சிற்பம்” அற்புதமானது இதனை பொற்றாமரைக் குளக்கரையில் உள்ள
துலாபார தூண் அருகில் நின்று பார்க்கலாம்.
* பொற்றாமரைக்குளத்தின் வடக்கு கரையில் உள்ள தூண்களில் மதுரை நகரை நிர்மாணித்த மன்னர் குலசேகர பாண்டியன், தனஞ்செயன் என்ற வணிகரின் சிலைகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !